கருத்தரிப்புச் சிகிச்சை - "ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு"
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவு கருத்தரிப்புச் சிகிச்சை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
ஊழியர்கள் கருத்தரிப்புச் சிகிச்சைக்குச் செல்வதற்கு ஏற்ற வேலையிடக் கலாசாரத்தை உருவாக்குவதில் முதலாளிகளை ஈடுபடுத்தப் பிரிவு விரும்புவதாக அதன் தலைவர் சிம் அன் தெரிவித்தார்.
ஊழியர்கள் சிலர் கருத்தரிப்புச் சிகிச்சைக்குச் செல்வதை மேலதிகாரிகளிடம் கூறத் தயங்கலாம்;
அதனால் வேலையிடத்தில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சலாம்.
கருத்தரிப்புச் சிகிச்சை குறித்து இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
சிகிச்சைக்காக விடுப்பு வழங்குவது, ஆண், பெண் இரு பாலருக்கும் வேலையிடப் பாதுகாப்பு அளிப்பது; திருமணமாகாத ஊழியர்களை நியாயமான முறையில் நடத்துவது ஆகியவை பரிந்துரைகளில் அடங்கும்.
இந்தப் பரிந்துரைகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் திருமணம், பிள்ளை வளர்ப்புப் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
சிகிச்சை பெறும் சிங்கப்பூரர்கள் ஏற்கனவே குடும்பத்தைத் தொடங்கவேண்டும் என்று உறுதியாக இருக்கின்றனர்;
அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கினால் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நம்புவதாகத் திருவாட்டி சிம் அன் சொன்னார்.