Skip to main content
NETS
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

NETS - QR ஸ்கேன் இல்லாமல் தட்டி கட்டணம் செலுத்தும் முறை சோதனை

வாசிப்புநேரம் -
NETS - QR ஸ்கேன் இல்லாமல் தட்டி கட்டணம் செலுத்தும் முறை சோதனை

படம்: Tan Weizhen/TODAY

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 18 Nov 2026 04:00PM புதுப்பிப்பு : 18 Nov 2026 05:38PM

QR குறியீட்டை ஸ்கேன் செய்யாமல் கைத்தொலைபேசியைக் கொண்டு தட்டினால் பணம் செலுத்த முடியுமா?

NETS நிறுவனம் புதிய கட்டண முறையைச் சோதிக்கவிருக்கிறது.

அடுத்த மாதம் தோ பாயோ (Toa Payoh) வட்டாரத்தில் நிறுவனம் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கவிருக்கிறது.

"tap QR to pay” எனும் அத்திட்டம் இரண்டு மாதம் நீடிக்கும்.

வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும்போது NETS செயலியைத் திறந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்ய அவசியமில்லை.

சோதனை வெற்றிபெற்றால் புதிய கட்டண முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

அத்துடன் NETS அதன் செயலியையும் புதுப்பிக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட செயலியில் குடும்பத்தினரின் செலவுகளைக் கவனிக்கவும் கையாளவும் முடியும்.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளும் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்குள் எளிதாகப் பணத்தைச் செலவிட செயலி உதவும். 

தற்போது NETS செயலியை 50,000க்கும் மேற்பட்ட SGQR கட்டண இடங்களில் பயன்படுத்தலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்