Skip to main content
500 காகங்கள் கொல்லப்பட்டன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

500 காகங்கள் கொல்லப்பட்டன - சுடும் நடவடிக்கை விரிவடைகிறது

வாசிப்புநேரம் -
500 காகங்கள் கொல்லப்பட்டன - சுடும் நடவடிக்கை விரிவடைகிறது

படம்: MND

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காகங்கள் சுடும் நடவடிக்கையை மேலும் பல வட்டாரங்களுக்குப் படிப்படியாக விரிவுப்படுத்தவிருப்பதாகத் தேசியப் பூங்காக் கழகம் அறிவித்திருக்கிறது.

இவ்வாண்டு மார்ச் மாதம் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து 500 காகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.

அதை அடுத்து புக்கிட் பாஞ்சாங், மரின் பரேட், தானா மேரா ஆகிய இடங்களுக்கு நடவடிக்கையைக் கழகம் விரிவுப்படுத்துகிறது.

அவ்விடங்களில் காகங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கழகம் சொன்னது.

அங்குப் பாதுகாப்பாகக் காகங்களைச் சுட முடியும் என்பதால் முதலில் அந்தப் பகுதிகளுக்கு நடவடிக்கையை விரிவுப்படுத்தப்போவதாகவும் அது குறிப்பிட்டது.

முதலில் காகங்களைச் சுடும் நடவடிக்கை பீஷான், ஜூரோங், கிராஞ்சி, பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் நடத்தப்பட்டது.

காகங்களைச் சுடும் நடவடிக்கை 2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இப்போது நடவடிக்கை மீண்டும் விரிவுபடுத்தப்படுகிறது.

காகங்களின் எண்ணிக்கை வரம்பைத் தாண்டியதால் சிங்கப்பூரின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படலாம், குடியிருப்பாளர்களும் தாக்கப்படலாம் என்று தேசியப் பூங்காக் கழகம் கூறியது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்