Skip to main content
QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை - NUS, NTU பின்னடைவு

வாசிப்புநேரம் -
QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை - NUS, NTU பின்னடைவு

(கோப்புப் படம்: Channel NewsAsia)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான அண்மைத் தரவரிசையில் சிங்கப்பூரின் இரண்டு முன்னணிப் பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் மூன்று இடங்கள் கீழிறங்கி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஐந்து இடங்கள் சரிந்து எட்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

ஹாங்காங் பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

சிங்ஹுவா பல்கலைக்கழகம் ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களில் ஹாங்காங்கின் ஐந்து பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

சீனாவின் மூன்று பல்கலைக்கழகங்களும் சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்களும் பட்டியலில் உள்ளன.

ஒட்டுமொத்தத் தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டாலும் சில முக்கிய அம்சங்களில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

முதலாளிகளிடையே நற்பெயர், ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேற்கோள்கள், அனைத்துலக மாணவர்களின் விகிதம் உள்ளிட்ட ஏழு அம்சங்களில் சிங்கப்பூர் ஆக உயர்ந்த சராசரி மதிப்பெண்களைப் பெற்றது.

QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 1,700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஆதாரம் : 8world

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்