Skip to main content
தடையற்ற விநியோகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தடையற்ற விநியோகம் - சிங்கப்பூர் மலேசியா ஆலோசனை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் மத்திய கிழக்கு விவகாரத்தில் அரசதந்திர அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். 

மத்திய கிழக்குப் போர் நீடிக்கும் வேளையில்  விநியோகத் தொடரின் தாக்குப் பிடிக்கும் திறன் குறித்து தலைவர்கள் இருவரும் பேசினர்.  

பிரதமர் வோங் திரு அன்வாருடன் தொலைபேசியில் உரையாடினார். 

சிங்கப்பூரும் மலேசியாவும் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்யும் வழிகளையும்  அவர்கள் கலந்துபேசினர். 

மத்திய கிழக்கில் தற்காலிகச் சண்டை நிறுத்தத்தை வரவேற்பதாகச் சொன்ன திரு அன்வார், போரை முடிவுக்குக் கொண்டுவர நீண்ட காலத் தீர்வு தேவை என்றார். 

சிங்கப்பூர், மலேசியா போன்ற அண்டை நாடுகள் ஒருங்கிணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்