2027 ஜூன் மாதத்துக்குள் எல்லா ERP நுழைவாயில்களும் அகற்றப்படும்
(படம்: CNA/Ooi Boon Keong)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் ERP 2.0 என்றழைக்கப்படும் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறையைக் கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
அவற்றில் ஒரு பகுதியாகத் தற்போதுள்ள ERP கட்டண நுழைவாயில்கள் அகற்றப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள 95 நுழைவாயில்களில் 62 ஏற்கனவே செயல்பாட்டில் இல்லை.
அவற்றை அகற்றும், மாற்றியமைக்கும் பணிகள் அக்டோபரில் தொடங்கின.
இதுவரை 12 நுழைவாயில்கள் அகற்றப்பட்டுள்ளன.
எஞ்சிய 33 நுழைவாயில்கள் டிசம்பர் 31ஆம் தேதிவரை செயல்படும்.
அனைத்து நுழைவாயில்களும் 2027 ஜூன் மாதத்திற்குள் அகற்றப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் எனற நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
செயற்கைக்கோள் சமிக்ஞைகள் பலவீனமாக இருக்கும் இடங்களில் சில நுழைவாயில்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
புதிய கட்டண முறைக்குத் தேவையான சாதனங்கள் அவற்றில் பொருத்தப்படும்.
ERP 2 முறையில் வாகனங்கள் கட்டணப் பகுதிகளைக் கடப்பதைச் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் கண்டறியும்.
அதனால் கட்டணம் வசூலிக்க நுழைவாயில்கள் தேவையில்லை.
கட்டணப் பகுதிகளை அடையாளம் காட்ட சாலைகளில் நீல நிற ERP குறியீடுகள் வரையப்படுகின்றன.
விரைவுச்சாலைகளில் ஒவ்வொரு தடத்திலும் மூன்று குறியீடுகள் இடம்பெறும்.
மற்ற முக்கியச் சாலைகளில் இரண்டு குறியீடுகள் இருக்கும்.
வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சாதனம், கட்டணப் பகுதியை நெருங்கும்போது ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கும்.
செலுத்த வேண்டிய கட்டணத்தையும் காட்டும்.
கட்டணப் பகுதியைக் கடந்ததும் வசூலிக்கப்பட்ட தொகை தெரிவிக்கப்படும்.