11ஆவது நாளாகத் தொடரும் பிரித்தம் சிங்கின் வழக்கு விசாரணை
வாசிப்புநேரம் -

CNA
எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங்கின் வழக்கு இன்று காலை மீண்டும் தொடர்கிறது.
திருவாட்டி ரயிசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததை விசாரித்த நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் திரு பிரித்தம் பொய் சொன்னாரா என்று நீதிமன்றம் விசாரிக்கிறது.
அரசாங்கத் தரப்பின் வாதம் நிறைவுற்ற நிலையில் திரு பிரித்தம் விரும்பினால் தற்காப்புத் தரப்பின் வாதத்தை முன்வைக்கலாம் என்று நீதிமன்றம் நேற்றுக் கூறியது.
தமது வாதத்தை முன்வைக்க முடிவெடுத்து நேற்று சாட்சியமளிக்கத் தொடங்கினார் திரு பிரித்தம்.
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய் சொன்னதாக இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
இன்று காலை சுமார் 10 மணிவாக்கில் அரசாங்கத் தரப்பு திரு பிரித்தமிடம் குறுக்கு விசாரணையை நடத்தத் தொடங்கியது.

ஆதாரம் : CNA