Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலையும் சரித்திரமும் - சிலோன் ரோடு

உணவு விற்பனையாளர்கள், ஜவுளித்தொழில் வர்த்தகர்கள், பலசரக்கு வியாபாரிகள் ஆகியோர் அங்கு நிறைந்திருந்தனர். 

வாசிப்புநேரம் -

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த தமிழர்களை சிலோன் ரோடு நினைவுகூர்கிறது.

19ஆம் நூற்றாண்டில் அவர்கள் ஜூ சியாட், காத்தோங் ஆகிய வட்டாரங்களில் பெரும் எண்ணிக்கையில் குடியேறினர்.

அக்காலத்தில் இலங்கை, சிலோன் என்று அழைக்கப்பட்டது.

1880ஆம் ஆண்டுக்கும் 1890ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக சிங்கப்பூருக்கு வந்தனர்.

ஸ்ட்ரெயிட்ஸ் செட்டல்மெண்ட்ஸ் (Straits Settlements) பகுதிகளில் அரசாங்கச் சேவை தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அதற்குத் திறன்பெற்ற ஆடவர்கள் தேவைப்பட்டனர்.

அங்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகள் இலங்கைத் தமிழர்களைச் சுண்டியிழுத்தன.

சம்பளமும் அதிகமாக இங்குக் கிடைத்தது.

அரசாங்கச் சேவைத்துறையில் அவர்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்தனர்.

19,20ஆம் நூற்றாண்டுகளில் சிலோன் ரோட்டில் துடிப்புமிக்க வியாபாரம் நடந்துள்ளது.

உணவு விற்பனையாளர்கள், ஜவுளித்தொழில் வர்த்தகர்கள், பலசரக்கு வியாபாரிகள் ஆகியோர் அங்கு நிறைந்திருந்தனர்.

தற்போது சிலோன் ரோடு குடியிருப்பு வட்டாரமாகத் திகழ்கிறது.

கூட்டுரிமை வீடுகளும் தனியார் வீடுகளும் சிலோன் ரோட்டை அலங்கரிக்கின்றன.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம், செயிண்ட் ஹில்டா தேவாலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்களும் அங்கு அமைந்துள்ளன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்