SIMBA நிறுவனத்தின் இணையத்தளத்தைப்போல் தோன்றும் போலித் தளங்கள் - $83,000 இழப்பு
வாசிப்புநேரம் -
படம்: சிங்கப்பூர்க் காவல்துறை
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
SIMBA நிறுவனத்தின் இணையத்தளத்தைப்போல் காட்சியளிக்கும் மோசடித் தளங்கள் குறித்து 62 புகார்களைப் பெற்றிருப்பதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியிருக்கிறது.
இவ்வாண்டு மார்ச்சிலிருந்து இதுவரை மோசடித் தளங்களுக்குச் சென்றவர்கள் குறைந்தது 83,000 வெள்ளியை இழந்தனர்.
Google மூலம் SIMBAவின் இணையத்தளத்தைத் தேடியவர்களுக்கு மோசடித் தளங்கள் கிடைத்தன.
SIMBA தொலைத்தொடர்புச் சேவைத் திட்டத்தில் பணத்தை நிரப்பப் பார்த்தபோது மோசடி நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அதன்வழி மோசடிக்காரர்களுக்கு மக்களின் வங்கி அட்டை எண் விவரங்கள் கிடைத்தன.
இணையத்தைப் பயன்படுத்தும்போது ஒரு தளம் போலித்தளமா இல்லையா என்பதை ஆராயுமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
குறிப்பாக இணையத்தள முகவரியில் எழுத்துப் பிழை இருக்கிறதா என்பதை சரிபார்க்கவேண்டும் என்று காவல்துறை சொன்னது.

தொடர்புடையது:
ஆதாரம் : Mediacorp Seithi