SIA விமானங்களில் புதிய இருக்கை, கட்டில், கால்களுக்குக் கூடுதல் இடம்...
படம்: Singapore Airlines
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) 10 ஆண்டுகளில் முதல்முறையாக அதன் விமானங்களைப் பெரிய அளவில் சீரமைக்கவிருக்கிறது.
இதுவரை இல்லாத அளவில் நிறுவனம் 2 பில்லியன் வெள்ளியைச் செலவிடும்.
72 விமானங்களின் உட்புறம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
புதிய இருக்கைகள், அனைவருக்கும் அதிவேக இணையத் தொடர்பு போன்ற வசதிகளை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முதல் வகுப்புப் பிரிவில் உள்ள இருக்கைகள் 2 மீட்டர் நீளம், சுமார் 80 செண்டிமீட்டர் அகலத்தில் அமைந்திருக்கும்.
நடுவில் உள்ள திரையை அகற்றினால் இருவர் வசதியாகப் படுக்கும் கட்டிலாக அது மாறும்.
பயணிகள் விமானத் துறையில் இது ஆகப் பெரியது என்று நிறுவனம் கூறுகிறது.
வணிக வகுப்பிலும் இருக்கைகள் மேம்படுத்தப்படும்.
Economy வகுப்பில் இருக்கை இடைவெளி மேம்பட்டிருக்கும். கால்களை வைப்பதற்குக் கூடுதல் வசதியும் இருக்கும்.
சுமார் 5,000 பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் சீரமைப்புப் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
கருத்துத் திரட்டு 8 ஆண்டுகாலம் நடைபெற்றது.
பயணிகள் பயன்படுத்தும் தொடுதிரைகளுக்கு மெருகூட்டப்படும். இணையச் சேவை மேம்படுத்தப்படும்.
2,500க்கும் அதிகமான பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன.
100 புதிய உணவுத் தெரிவுகளைப் பயணிகள் எதிர்பார்க்கலாம்.
நீண்ட பயண நேரம் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A350 ரக விமானங்களில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.