Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - தாய்லந்து அரையிறுதி ஆட்டம்: விற்றுத் தீர்ந்த நுழைவுச்சீட்டுகள் மறுவிற்பனை - ரசிகர்கள் வேதனை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - தாய்லந்து அரையிறுதி ஆட்டம்: விற்றுத் தீர்ந்த நுழைவுச்சீட்டுகள் மறுவிற்பனை - ரசிகர்கள் வேதனை

படம்: Carousell

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசியான் கிண்ண அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் தாய்லந்துடன் மோதவிருக்கிறது.

முதற்கட்ட ஆட்டம் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஜாலான் புசார் (Jalan Besar) அரங்கில் நடைபெறும்.

அதை நேரில் காணச் சிங்கப்பூர் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம்.

ஆனால் சிலருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

காரணம்?

நேற்று காலை 11 மணிக்கு Tickethotline இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு வந்தன.

ஆனால் சில நிமிடங்களிலேயே அவை விற்றுத்தீர்ந்தன.

சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் அதனை உறுதிப்படுத்தியது.

இதனால் 11 மணிக்கு முன்னரே காத்திருந்த பலருக்கு ஏமாற்றம்.

ஏமாற்றம் அதோடு நின்றுவிடவில்லை.

நுழைவுச்சீட்டுகளை வாங்கிய சிலர் அவற்றைப் பல மடங்கு விலைக்கு மீண்டும் விற்பனை செய்யத் தொடங்கினர்.

நுழைவுச்சீட்டுக் கிடைக்காத ரசிகர்களுக்கு அது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நுழைவுச்சீட்டுகள் மறுவிற்பனை

Tickethotline இணையத்தளத்தைத் தவிர வேறு எங்கும் நுழைவுச்சீட்டுகள் அதிகாரபூர்வமாக விற்கப்படவில்லை.

அதனால் நுழைவுச்சீட்டுகளை வாங்கிய சிலர், அவற்றை Carousell மின் வணிகத்தளத்தில் மறுவிற்பனை செய்யத் தொடங்கினர்.

முதற்கட்ட ஆட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகளின் அசல் விலை:

பிரிவு 1: $49
பிரிவு 2: $35

ஆனால் Carousellஇல் பிரிவு 1 நுழைவுச்சீட்டை ஒருவர் 1,500 வெள்ளிக்கு விற்கிறார். அசல் விலையைவிட இது 30 மடங்கு அதிகம்.

மற்றொருவர் 200 வெள்ளிக்கு விற்பதை CNA கண்டறிந்தது.

நுழைவுச்சீட்டுகள் மறுவிற்பனை செய்யப்படுவதை அறிந்துள்ளதாகச் சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் கூறியது.

அதிகாரபூர்வமற்ற தளங்களிலிருந்து வாங்கப்படும் நுழைவுச்சீட்டுகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று சங்கம் நினைவூட்டியது.

இத்தகைய மறுவிற்பனையாளர்கள் குறித்துப் புகார் தருமாறு சிங்கப்பூர்க் காற்பந்து ரசிகர் குழு Singa Brigade ரசிகர்களைக் கேட்டுக்கொண்டது.

எதனால் இந்த நிலை?

அரையிறுதி ஆட்டம் ஜாலான் புசார் அரங்கில் நடைபெறுகிறது.

அங்கு அதிகபட்சம் 6,000 பேர்தான் அமர முடியும்.

இதுவே காலாங்கிலிருக்கும் தேசிய அரங்கம் என்றால் அதிகபட்சம் 55,000 பேர் அமரலாம்.

ஆனால் தேசிய தின அணிவகுப்பு நடைபெற்று முடிந்ததால் இப்போதைக்கு அந்த அரங்கத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று The Kallang குழுமம் CNA செய்தியிடம் கூறியது.

அரங்கத்தைத் தயார் செய்ய எப்படியும் இரண்டரை வாரங்கள் ஆகும் என்று குழுமம் சொன்னது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்