N95 முகக்கவச விநியோகம்: வரும் சனிக்கிழமை கடைசி நாள்
படம்: CNA/Syamil Sapari
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் எளிதில் பாதிக்கப்படுவோருக்கு N95 முகக்கவசங்களை விநியோகம் செய்வதை வரும் சனிக்கிழமை (7 நவம்பர்) நிறுத்தவிருக்கிறது.
புகைமூட்டம் கணிசமாகத் தணிந்திருப்பதால் மற்ற புகைமூட்ட நிவாரண நடவடிக்கைகளையும் அரசாங்கம் நிறுத்தவிருக்கிறது.
இந்தத் தகவலை தேசியச் சுற்றுப்புற அமைப்பு வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு முகக்கவசம் பெறுவது முடிவுக்கு வரும்.
நிறுவனங்கள் புகைமூட்டப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்றி வெளிப்புறப் பணிகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் அமைப்பு முதலாளிகளுக்குத் தெரிவித்திருக்கிறது.
சென்ற மாதம் 14ஆம் தேதி நிவாரண நடவடிக்கைகள் தொடங்கின.
அப்போது 24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (PSI) மிகவும் உயர்வாக இருந்தது.