Skip to main content
இளையர்களுக்கு உணவங்காடிப் பயிற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இளையர்களுக்கு உணவங்காடிப் பயிற்சி

வாசிப்புநேரம் -
இளையர்களுக்கு உணவங்காடிப் பயிற்சி

படம்: CNA/Melody Chan

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் இளையர்களுக்கு உணவங்காடிப் பயிற்சித் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

இது ஒரு புதிய முயற்சி. 

தொழில்நுட்பக் கல்விக் கழகம், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி (Temasek Polytechnic), உணவங்காடிக் கடைக்காரர்கள் ஆகிய முத்தரப்பின் மூவாண்டு ஒப்பந்தத்தில் பயிற்சி தொடங்குகிறது. 

அனுபவமிக்க உணவங்காடிக் கடைக்காரர்களின் வழிகாட்டுதலுடன், மாணவர்கள் உணவு தயாரிக்கக் கற்றுக்கொள்வார்கள்; உணவுக் கடைகளை நடத்துவதிலும் நேரடிப் பயிற்சி பெறுவர்.

உணவங்காடிக் கடைக்காரர்கள் கல்வி நிலையங்களோடு சேர்ந்து பணியாற்றுவர். 

மாணவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பயிற்சி வாய்ப்புகளை வழங்குவர்.

சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரத்தை வருங்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லத் திட்டம் முற்படுகிறது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் (Goh Hanyan) உணவங்காடிக் கலாசாரம் பல தலைமுறைகளாக இருந்தபோதிலும் ஒவ்வொரு தலைமுறையும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். 

மக்கள் நேசிக்கும் உணவங்காடிக் கலாசாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்து அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் அனைவரும் பங்களிக்கலாம் என்றார் அவர்.
 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்