வலுவான காற்பந்து அணிகளுடன் மோதத் தயாராகும் சிங்கப்பூர்!
படம்: CNA/Matthew Mohan
This audio is generated by an AI tool.
பிரேசில் (Brazil), பராகுவே (Paraguay) போன்ற வலுவான அணிகளுக்கு எதிராகச் சிங்கப்பூர்க் காற்பந்து அணி விளையாடுவது அவசியம் என்று அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேவின் லீ (Gavin Lee) கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் அணி அதன் ஆட்டத்திறனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினால், அத்தகைய வலுவான அணிகளுடன் ஆட வேண்டும் என்றார் அவர்.
அதோடு இன்னும் எந்தெந்த அம்சங்களில் கூடுதல் பயிற்சி தேவை என்பதையும் அறிந்துகொள்ளலாம் என்றார் திரு லீ.
சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் நட்புமுறை ஆட்டங்களில் ஜப்பானும் கலந்துகொள்ளும்.
சிங்கப்பூரும் பராகுவேயும் சந்திக்கும் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
சிங்கப்பூர் அணிக்குக் காத்திருக்கும் சவால் கடினமானது எனக் கூறும் திரு லீ அதைச் சமாளிப்பது முடியாத ஒன்றல்ல என்று சொன்னார்.
நட்புமுறை ஆட்டங்கள் அடுத்தாண்டு ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தயாராக சிங்கப்பூர் அணிக்கு உதவும்.
முதல் முறையாக, தகுதிச் சுற்றுகளின் மூலம் சிங்கப்பூர் அணி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.