குடும்பங்கள் எப்படித் தாக்குப்பிடிக்கின்றன? - 10,000 தம்பதிகளிடம் 10 ஆண்டு ஆய்வு
(படம்: Mediacorp)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் திருமண வாழ்க்கை குறித்து நீண்டகால ஆய்வு ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதில் 10,000க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொள்வர்.
குடும்பங்கள் காலப்போக்கில் சவால்களை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதை அறிய ஆய்வு உதவும்.
ஆசியக் குடும்ப மாநாட்டில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெ மிங் (Goh Pei Ming) அதனைத் தெரிவித்தார்.
ROOTS எனப்படும் இந்த ஆய்வு சிங்கப்பூர்க் குடும்பங்களின் மீள்திறனைப் பற்றியது.
வாழ்க்கையின் பெரிய மாற்றங்கள், சவால்களுக்கு நடுவே குடும்பங்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள ஆய்வு உதவும்.
ஆய்வில் பங்கேற்பவர்கள் 10 ஆண்டுகளுக்குக் கண்காணிக்கப்படுவார்கள்.
புதிதாகத் திருமணமானவர்களும் திருமணமாகி இரண்டு முதல் ஒன்பது ஆண்டுகள் ஆனவர்களும் ஆய்வில் பங்கேற்பார்கள்.
குழந்தைகள் உள்ள தம்பதிகளும், குழந்தைகள் இல்லாத தம்பதிகளும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
ஆய்வில் பங்கேற்பவர்களைச் சேர்க்கும் பணி 2028ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.