Skip to main content
சவுதி அரேபியாவுக்கான பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுரை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சவுதி அரேபியாவுக்கான பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுரை

வாசிப்புநேரம் -
சவுதி அரேபியாவுக்கான பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுரை

Social Media/via REUTERS

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 14 Oct 2026 09:22AM புதுப்பிப்பு : 14 Oct 2026 11:44AM

சிங்கப்பூரர்கள் சவுதி அரேபியாவுக்கான அனைத்துப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு  வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களையும், எரிசக்திக் கட்டமைகளையும் குறிவைத்து ஜூலை மாதத்திலிருந்து அதிக அளவில் ஏவுகணை, வானூர்தித் தாக்குதல் நடத்தப்படுவதை அமைச்சு சுட்டியது.

சவுதி அரேபியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் மன்னர் காலித் அனைத்துலக விமான நிலையத்தையும், அதிக அபாயம் உள்ள பிற பகுதிகளையும் முற்றிலும் தவிர்க்கும்படி அது வலியுறுத்தியது. 

சவுதி அரேபியாவுக்குள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சவுதி அரேபியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள்,  வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்தில் பதிந்துகொள்ளவும் நினைவூட்டப்பட்டது.

இதற்கிடையே, உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் சிங்கப்பூரர்கள், தங்கள் பயணத்தைத் தற்காலிகமாய் ஒத்திவைப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு MUIS எனும் இஸ்லாமிய சமய மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்