சிங்கப்பூரின் பொருளாதாரம் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் பொருளாதாரம் மூன்றாவது காலாண்டிலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் 5.4 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சின் முன்னோடி மதிப்பீடுகள் காட்டுகின்றன.
சென்ற காலாண்டின் 6.2 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அது சற்றுக் குறைவு.
கட்டுமானத் துறையில் நல்ல முன்னேற்றம். அது மூன்றாம் காலாண்டில் 8.8 விழுக்காடு வளர்ந்தது.
கடந்த காலாண்டின் வளர்ச்சியை விட அது அதிகம்.
இரண்டாம் காலாண்டில் 6.1 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது.
உற்பத்தித் துறை 7.5 விழுக்காடு வளர்ந்தது.
இரண்டாம் காலாண்டின் 12.9 விழுக்காட்டு வளர்ச்சியை விட அது குறைவு.
மின்னியல், பொது உற்பத்தி, துல்லியப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரித்தது.
அமெரிக்கா – ஈரான் போர் தொடர்வதால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால் மக்கள் செலவைக் குறைத்துள்ளதாக அமைச்சு சொன்னது.
இவ்வாண்டின் 4ஆம் காலாண்டிலும் அதன் தாக்கம் தெரியலாம்.