மூத்த அமைச்சர் லீ ஜப்பான் பயணம்
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/ Lee Hsien Loong)
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) நாளை (ஜூலை 21) ஜப்பானின் ஒசாக்கா, தோக்கியோ நகரங்களுக்கு ஒரு வாரப் பயணம் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 60 ஆண்டு அரசதந்திர உறவை முன்னிட்டு அந்தப் பயணம் அமைகிறது.
ஒசாக்கா Expo 2025இல் இடம்பெறும் சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் திரு லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
புத்தாக்கம், மீள்திறன், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல் தொடர்பான முக்கிய செய்திகளைச் சிங்கப்பூரின் கண்காட்சிக் கூடம் முன்வைக்கிறது.
தோக்கியோவில் ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபாவைத் (Shigeru Ishiba) திரு லீ சந்திப்பார்.
ஜப்பானுக்கும் அதன் மக்களுக்கும் பங்களித்த தனிநபர்களை அங்கீகரிக்கும் ஆக உயரிய Order of the Rising Sun விருது அவருக்கு வழங்கப்படும்.
ஜப்பானில் வசிக்கும் சிங்கப்பூரர்கள், ஜப்பானிய அரசியல், வர்த்தகத் தலைவர்கள் ஆகியோரையும் மூத்த அமைச்சர் லீ சந்திப்பார்.