Skip to main content
மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மின்-சிகரெட் பயன்படுத்திய 245 மாணவர்கள் பிடிபட்டனர்

வாசிப்புநேரம் -
மின்-சிகரெட் பயன்படுத்திய 245 மாணவர்கள் பிடிபட்டனர்

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒரே காலாண்டில் மின்-சிகரெட் பயன்படுத்திய 245 மாணவர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எலிசா சென் (Elysa Chen) மன்றத்தில் கேள்வி கேட்டார்.

பள்ளிகளில் தற்போது எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் பலன் தருகின்றனவா? இளையர்களிடையே மின்-சிகரெட் பயன்பாட்டைக் குறைக்க அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கேட்டார்.

அதற்குச் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) பதில் தந்தார்.

மாணவர்கள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவது பள்ளிகள் விழிப்புடன் செயல்படுவதைக் காட்டுகிறது என்றார் அவர்.

எனினும், அந்த எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பள்ளிகளின் தடுப்பு நடவடிக்கைகள் பலன் அளிக்கின்றனவா என்பதை மதிப்பிட முடியாது என்றார் திரு ஓங்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இளையர்களிடையே மின்-சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பள்ளிப் பாடத்திட்டம், அறிமுக நிகழ்ச்சிகள், மாணவர்கள் வழிநடத்தும் முயற்சிகள் வாயிலாக மின்-சிகரெட்டின் தீங்குகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

சக மாணவர்களின் நெருக்குதலை எதிர்கொள்ளவும் இளையர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது.

மின்-சிகரெட் பயன்படுத்திப் பிடிபடும் மாணவர்களுக்கு எதிராக ஆணையம் நடவடிக்கை எடுக்கும். பள்ளிகளும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படும் என்று திரு ஓங் சொன்னார்.

மின்-சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவி தேவைப்படுவோர் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் QuitLine சேவையை அணுகலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்