"சிங்கப்பூரில் குழாய் நீர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது"
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Facebook/Grace Fu
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் குழாய்களில் வரும் தண்ணீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) உறுதியளித்துள்ளார்.
புகைமூட்டத்தால் மழைநீர் கருப்பாக இருப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய தண்ணீர் அமைப்பான PUBஇன் ஆய்வுக்கூடத்தில் இருந்தபடி திருவாட்டி ஃபூ காணொளி வெளியிட்டார்.
புகைமூட்டத்தின்போது சேகரிக்கப்படும் மழைநீரில் அமிலத் தன்மையும் நுண்துகள்களும் அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாக அவர் சொன்னார்.
எனினும், சிங்கப்பூர் நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் பல கட்டங்களாகச் சுத்திகரிக்கப்படுகிறது என்றார் அமைச்சர்.
அதனால் குழாயிலிருந்து வரும் நீர் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானது என்று அவர் உறுதியளித்தார்.
குடிக்கவோ சமைக்கவோ குளிக்கவோ மழைநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று திருவாட்டி ஃபூ அறிவுறுத்தினார்.

ஆதாரம் : Mediacorp Seithi