Skip to main content
தனியார் வாடகைக் கார்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தனியார் வாடகைக் கார்கள் - கூடுதல் கடன் வரம்புகள்

வாசிப்புநேரம் -
தனியார் வாடகைக் கார்கள் - கூடுதல் கடன் வரம்புகள்

(கோப்புப் படம்: Mediacorp)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாளை முதல் தனிநபர்கள் வாங்கும் தனியார் வாடகைக் கார்களுக்கும் கடன் வரம்புகள் விதிக்கப்படும்.

சொந்தப் பயன்பாட்டுக்காகக் கார் வாங்குவோருக்கான அதே வரம்புகள் அவற்றுக்கும் பொருந்தும்.

தனிநபர்கள் பதிவு செய்யும் தனியார் வாடகைக் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாதத்துக்குச் சுமார் 500 கார்கள் பதிவு செய்யப்படுகின்றன.

தனியார் வாடகைச் சேவை வழங்கும் நோக்கம் இல்லாமல், கார் கடன் வரம்புகளைத் தவிர்ப்பதற்காகச் சிலர் அவ்வாறு வாகனங்களைப் பதிவுசெய்யக்கூடும் என்று அரசாங்கம் தெரிவித்தது.

வெளிச்சந்தை மதிப்பு (OMV) 20,000 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான கார்களுக்கு, விலையில் 70 விழுக்காடு வரை கடன் பெறலாம்.

20,000 வெள்ளிக்கு மேற்பட்ட கார்களுக்கு அதிகபட்சமாக 60 விழுக்காடு வரை கடன் பெறலாம். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளாக மாற்றப்படும்.

வங்கிகள், உரிமம்பெற்ற கடன் நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கும் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

வர்த்தக வாகனங்கள், நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் வாடகைக் கார்கள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்.

 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்