Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Toyota Fortuner)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவில் பாட்டி வாங்கிய 200 ரூபாய் (சுமார் 2.60 வெள்ளி) அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டு, 6 வயதுப் பேரனுக்கு Toyota Fortuner காரைப் பரிசாகப் பெற்றுத்தந்துள்ளது.
மெதான்ஷ் ராய்க்வார் (Medansh Raikwar) என்ற அந்தச் சிறுவன் மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரைச் (Burhanpur) சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரது பாட்டி 200 ரூபாய்க்குச் சீட்டு வாங்கிப் பேரனின் பெயரைப் பதிவு செய்திருந்தார்.
அண்மையில் நடந்த அதிர்ஷ்டக் குலுக்கில் மெதான்ஷின் வென்றதும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஈராண்டாகக் கார் வாங்கத் திட்டமிட்டிருந்த குடும்பத்துக்கு அது எதிர்பாராத பரிசாக அமைந்தது.
மேளதாளத்துடன் மெதான்ஷுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. உறவினர்களும் உள்ளூர்வாசிகளும் திரண்டு அவரை வாழ்த்தினர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் Toyota Fortuner காரின் தொடக்க விலை சுமார் 4 மில்லியன் ரூபாய் (சுமார் 55,500 வெள்ளி). உயர்தர வகையின் விலை 6 மில்லியன் ரூபாய் (சுமார் 81,500 வெள்ளி) வரை விற்கப்படுகிறது.
200 ரூபாய் சீட்டுக்குப் பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் கிடைத்த செய்தி இணையவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆதாரம் : Others