Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

திருடனை காரால் மோதிக் கொன்ற சிங்கப்பூரருக்கு ஆஸ்திரேலியாவில் சிறை

வாசிப்புநேரம் -
திருடனை காரால் மோதிக் கொன்ற சிங்கப்பூரருக்கு ஆஸ்திரேலியாவில் சிறை
படம்: Envato Elements
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவில் பையைத் திருடிய ஆடவரைக் காரால் மோதிக் கொன்ற 29 வயதுச் சிங்கப்பூரருக்கு 5 ஆண்டுகள் 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிங்கன் இங் ஜிங் கை (Lincoln Ng Jing Kai) என்ற அந்த ஆடவருக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

2024ஆம் ஆண்டு மே மாதம் அவர் தமது காதலி, அவரின் குடும்பத்தினருடன் பெர்த் (Perth) நகருக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.

அவர்கள் வாடகைக்கு எடுத்த காரிலிருந்து ஒரு பை திருடப்பட்டது. அதில் கடப்பிதழ், iPad, பணம், இருப்பிடத்தைக் கண்டறியும் AirTag கருவி ஆகியவை இருந்தன.

மார்க் ஜான் பர்ன்ஸ் (Mark John Burnes) என்பவர் பையைத் திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

AirTag மூலம் பையின் இருப்பிடத்தைக் கண்டறிந்த லிங்கனும் மற்றவர்களும் காவல்துறையிடம் தகவல் கொடுத்தனர்.

மறுநாள் மின்சார சைக்கிளில் சென்ற பர்ன்ஸை அவர்கள் கண்டனர்.

லிங்கன் காரில் அவரைச் சுமார் 10 நிமிடம் துரத்தினார்.

பின்னர் பர்ன்ஸின் சைக்கிள் மீது லேசாகக் காரால் மோதினார். பர்ன்ஸ் கீழே விழுந்தார்.

அவர் தம்மைத் தாக்கக்கூடும் என்று அஞ்சிய லிங்கன், காரைப் பின்னோக்கிச் செலுத்த முயன்றார்.

ஆனால் கார் முன்னோக்கிச் சென்று பர்ன்ஸ் மீது மோதியது.

காருக்கு அடியில் சிக்கிய பர்ன்ஸ் சுமார் 25 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் மாண்டார்.

முதலில் லிங்கன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் நோக்கமின்றி மரணம் விளைவித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்