Skip to main content
பிரிட்டனில் பிரதமர் பதவிக்குப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரிட்டனில் பிரதமர் பதவிக்குப் போட்டி

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் பிரதமர் பதவிக்குப் போட்டி

(கோப்புப் படம்: REUTERS/Phil Noble)

பிரிட்டனில் அண்மையில் பதவி விலகிய சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) பிரதமர் கியர் ஸ்டார்மரை (Keir Starmer) எதிர்த்துப் போட்டியிடப்போவதாகக் கூறியிருக்கிறார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் தொடரும் நேரத்தில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

பிரிட்டனில் அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர்.

அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பின்னடைவைச் சந்தித்ததால் அதற்குப் பொறுப்பேற்றுப் பிரதமர் விலக வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.

பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகப் போவதில்லை என்று கூறுகிறார்.

ஆளும் தொழிற்கட்சியின் விதிமுறைப்படி பிரதமரை ஒருவர் எதிர்க்க வேண்டுமானால் 20 விழுக்காட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

Greater Manchester மேயர் ஆண்டி பர்ன்ஹாமும் (Andy Burnham) களம் காண விரும்புகிறார்.

அவருக்கு யாராவது நாடாளுமன்ற இடத்தைக் கொடுத்து, கட்சி அவருக்குப் போட்டியிட வாய்ப்புத் தந்து, அதில் அவர் வென்ற பிறகுதான் போட்டிக்கு வர முடியும். பல வாரம் பிடிக்கும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்