Skip to main content
கீழே பள்ளத்தாக்கு... மேலே வானம்... நடுவே கயிறு... நடக்க முடியுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கீழே பள்ளத்தாக்கு... மேலே வானம்... நடுவே கயிறு... நடக்க முடியுமா?

வாசிப்புநேரம் -
2 செண்டிமீட்டர் அகலத்தில் கயிறு...

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்... அதுவும் எந்தவித ஆதரவுமின்றி...

கீழே குனிந்து பார்த்தால் 400 மீட்டர் ஆழத்தில் பள்ளத்தாக்கு...

சீனாவின் சாங்ஜியேஜியே (Zhangjiajie) நகரில் Slackline என்கிற அந்தப் போட்டி நடைபெற்றது.

சீனா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த 20 slackline வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வெற்றியாளர்? லக்சம்பர்க்கைச் சேர்ந்த ஆர்ச்சி வில்லியம்ஸ் (Archie Williams).

அடுத்த ஆண்டு மீண்டும் போட்டியில் கலந்துகொள்ளப்போவதாக அவர் கூறினார்.

அவருக்கு அடுத்த நிலையில் போலந்தின் ஜாகுப் மொராவ்ஸ்கி (Jakub Morawski) வந்தார்.

மூன்றாவது இடத்தைச் சீனாவின் ஹி ஜின்யி (He Jinyi) பெற்றார்.

2018ஆம் ஆண்டு முதல் அந்தப் போட்டி சாங்ஜியேஜியே தேசிய வனப்பூங்காவில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்