அமெரிக்கக் கட்டுப்பாடுகளுக்கு இடையே Nvidia சில்லுகளை வாங்கிய சீனப் பல்கலைக்கழகம்
படம்: Pedro PARDO / AFP
This audio is generated by an AI tool.
சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு பல்கலைக்கழகம் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் அதிநவீன AI சில்லுகளை வாங்கியுள்ளது.
சீனாவுக்கு AI சில்லுகளை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்த பிறகும் அது சாத்தியமாகி இருக்கிறது.
AI துறையில் முன்னிலை அடைய அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி.
ஷியான் (Xi'an) நகரிலுள்ள நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகம் (Northwestern Polytechnical University) சென்ற மாதம் இரண்டு என்விடியா H200 சில்லுகளை வாங்கியதாகக் கொள்முதல் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவற்றின் மதிப்பு சுமார் 131,200 டாலர் (சுமார் 168,600 வெள்ளி).
செப்டம்பரிலும் பல்கலைக்கழகம் இரண்டு H200 சில்லுகளை வாங்கியதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
சீனாவின் ராணுவ ஆய்வுகளுடன் தொடர்புடைய ஏழு முக்கியப் பல்கலைக்கழகங்களில் அதுவும் ஒன்று.
H200 சில்லுகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது.
இதற்கிடையே, தேசியப் பாதுகாப்பைக் காரணங்காட்டிச் சீன நிறுவனங்களை அமெரிக்கா தேவையின்றிக் கட்டுப்படுத்துவதாகச் சீனா குறைகூறியது.
என்விடியா நிறுவனமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஏலிஸ் ஹுவாங்குடன் (Alice Huang) கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரு ஹுவாங்கைப் பதவியிலிருந்து நீக்க என்விடியா நிர்வாகக் குழு தயாராகிவருவதாக Wall Street Journal நாளேடு தெரிவித்துள்ளது.