Skip to main content
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தால் இணைந்த இரட்டைச் சகோதரிகள்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தால் இணைந்த இரட்டைச் சகோதரிகள்!

வாசிப்புநேரம் -
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தால் இணைந்த இரட்டைச் சகோதரிகள்!

படம்: Douyin

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பார்ப்பதற்கு அச்சு அசலாகத் தன்னைப் போலவே இருக்கும் பெண்...

அவர் தம்முடன் பிறந்த இரட்டைச் சகோதரியா?

சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததும் பிரிக்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு பெண்கள், சமூக ஊடகம் மூலம் ஒன்றுசேர்ந்துள்ளனர்.

லுவோ (Luo) எனும் பெண்ணின் உறவினர், Douyin செயலியில் அவரைப் போலவே தோற்றமளிக்கும் சியா (Xia) என்பவரைக் கண்டார்.

இருவருக்கும் ஒரே பிறந்தநாள், ஒரே உயரம், ஒரே மாதிரியான முகத்தோற்றம்!

விசாரித்தபோது இருவரும் குழந்தைப் பருவத்திலேயே தத்துக்கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து நேரில் சந்தித்த இருவரும் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

ஆச்சரியமாக, ஒருவரின் முகத்தைப் பயன்படுத்தி மற்றவரின் கைத்தொலைபேசியையும் திறக்க முடிந்தது!

அவர்களின் சந்திப்புக் காணொளி இணையத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளது.

இருப்பினும் இருவரும் இரட்டைச் சகோதரிகள் என்பது மரபணுச் சோதனை மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சிலர் இது விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட கதை என்று சந்தேகிக்கின்றனர்.

ஆனால் மற்றவர்கள் என்ன நினைத்தாலும் லுவோதான் தமது உண்மையான சகோதரி என்கிறார் சியா.

ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்