Skip to main content
பேரங்காடிக்குள் 20 பேர் பிணை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பேரங்காடிக்குள் 20 பேர் பிணை - காப்பாற்றும் முயற்சி தீவிரம்

வாசிப்புநேரம் -
பேரங்காடிக்குள் 20 பேர் பிணை - காப்பாற்றும் முயற்சி தீவிரம்

(படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கொலம்பியாவில் பேரங்காடியில் பிணை பிடிக்கப்பட்டோரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.

பாதுகாப்புப் படை பேரங்காடிக்குள் நுழைந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சில வெடிப்புச் சத்தங்களும் கேட்டன.

சம்பவம் கார்த்தகேனா (Cartagena) நகரில் நடந்தது.

துப்பாக்கிக்காரர்கள் பேரங்காடிக்குள் சுமார் 30 பேரைப் பிணை பிடித்ததாக நம்பப்படுகிறது.

பல மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் வயதில் மூத்த பெண்கள் உட்பட 10 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.

இன்னும் 20 பேர் பேரங்காடியில் சிக்கியுள்ளனர்.

கொலம்பியா அதிபரும் சம்பவ இடத்தில் உள்ளார்.

அவர் அங்கு பாதுகாப்புத் தளபதிகளைச் சந்தித்தார்.

துப்பாக்கிக்காரர்கள் கவச வாகனத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர்.

காவல்துறையினர் துரத்தியபோது அவர்கள் பேரங்காடிக்குள் தப்பிச் சென்று மக்களைப் பிணைபிடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்