Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பள்ளிக்குச் செல்லும் பிள்ளை பத்திரமாகத் திரும்புமா? மலேசியப் பெற்றோர் கவலை

வாசிப்புநேரம் -
பள்ளிக்குச் செல்லும் பிள்ளை பத்திரமாகத் திரும்புமா? மலேசியப் பெற்றோர் கவலை

படம்: FB/Sultan Ibrahim Sultan Iskandar

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 05 Oct 2026 08:52PM புதுப்பிப்பு : 05 Oct 2026 09:05PM
"என் பிள்ளைக்குப் பள்ளியில் பாதுகாப்பு உள்ளதா?"

“மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத மனிதராக நான் என் பிள்ளையை வளர்க்கிறேனா?"

இவை மலேசியப் பெற்றோரிடம் எழுந்துள்ள இரண்டு முக்கிய கேள்விகள்.

அதற்கு காரணம் ஐரீன் சோஃபியா முகமது கைரூல் ஃபைசல் (Irene Sofiya Mohd Khairool Faisal) எனும் 16 வயது மாணவியின் மரணம்.

மாணவியின் மரணம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரீனின் மரணத்துக்குக் காரணமானவர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகியிருக்கிறது.

மலேசியாவில் பலர் குறிப்பாகப் பெற்றோர் இதனை தொடர்ந்து விவாதிக்கின்றனர்.

பலர் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

ஐரீன் ஜொகூர் யோங் பெங்கில் (Yong Peng) நேற்று முன்தினம் (3 அக்டோபர்) கூடுதல் வகுப்புக்குச் சென்றபோது சம்பவம் நிகழ்ந்தது.

ஐரீன் வீடு திரும்பாததால் பாட்டி பள்ளிக்குச் சென்று தேடியபோது உடலைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் CCTV கேமராக்கள் இருந்தபோதிலும், ஐரீன் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு இல்லை என்று மலேசிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து CCTV, பாதுகாப்புச் சுற்றுக்காவல், மாணவர் வருகைப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக ஆய்வு செய்ய அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஐரீனின் மரணம் தொடர்பில் 16 வயது நிரம்பிய மூன்று மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

விசாரணை நடைபெறுகிறது.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோருக்கு இயல்பாக இருக்கவேண்டிய நம்பிக்கை இப்போது கேள்விகுறியாகியிருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.

எல்லாப் பள்ளிகளிலும் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என்று பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்