கடும் வெப்பத்தால் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு அபாயம்
வாசிப்புநேரம் -
(படம்: Anthony WALLACE / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கடும் வெப்பம், கர்ப்பிணிகளுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அதிக அபாயத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலைப் பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டீல் (Simon Stiell) எச்சரித்துள்ளார்.
கர்ப்பகாலத்தில் கடும் வெப்பத்துக்கு ஆளாவது குறைப்பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது, எடை குறைந்த குழந்தை பிறப்பது உள்ளிட்ட சிக்கல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், சிம்பாப்வே ஆகிய நாடுகளில் 1,000 மருத்துவர்கள், தாதியரிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட அனைவரும், கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்களையோ குழந்தைகளையோ பராமரித்திருப்பதாகக் கூறினர்.
மூன்றில் ஒருவர், குழந்தைகளிடையே வளர்ச்சிக் குறைபாடு, உணவு உட்கொள்வதில் சிரமம், நீர்ச்சத்துக் குறைபாடு போன்றவற்றைக் கண்டதாகத் தெரிவித்தனர்.

ஆதாரம் : AFP