Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

நோபல் பரிசு போன்ற பதக்கம் தயாரித்துத் தமக்கே வழங்கிக் கொண்ட பேராசிரியர்

வாசிப்புநேரம் -
நோபல் பரிசு போன்ற பதக்கம் தயாரித்துத் தமக்கே வழங்கிக் கொண்ட பேராசிரியர்

(படம்: insop.org)

பிரான்ஸைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் அவர் பெற்ற மொழியியல் விருதுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

காரணம்? அந்த விருதை அவரே உருவாக்கி தமக்குத் தாமே கொடுத்துக்கொண்டார்.

மொழியியல் (philology) துறை பேராசிரியர் ஃப்ளோரன்ட் மொன்ட்கிளேர் (Florent Montaclair).

2016ல் நோபல் பரிசு போன்று மொழியியல் துறைக்கான தங்கப் பதக்க விருதை அவர் பெற்றார்.

விருது வழங்கிய அமைப்பு ருமேனியாவைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரை அந்த விருதுக்கு முன்மொழிந்தபோது அந்நாட்டு செய்தியாளர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

அப்போது மொன்ட்கிளேரின் மோசடி அம்பலமானது.

அவரது விருது, அதன் பின்னால் இயங்கும் அமைப்பு, அவர் படித்ததாகக் கூறப்படும் பல்கலைக்கழகம் அனைத்தும் கற்பனையே என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காவல் துறை மொன்ட்கிளேரின் வீட்டைச் சோதனை செய்தபோது, "பதக்கத்திற்காகத்தானே வந்திருக்கிறீர்கள்?" என்றும் கேட்டுள்ளார்.

250 யூரோ கொடுத்து பதக்கத்தைத் தாமே செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

மொழியியல் துறைக்கு அங்கீகாரம் கொடுக்கவே அப்படிச் செய்ததாகவும் அவர் கூறினார்.

அது சட்டப்படி குற்றமா? என்று காவல் துறையும் குழப்பத்தில் உள்ளது.
ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்