Skip to main content
'Human'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

'Human' - இந்த ஆண்டின் சொல்...

வாசிப்புநேரம் -
'Human' - இந்த ஆண்டின் சொல்...

(படம்: AP/David Goldman)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மனிதர்களுக்கே உரிய குணங்கள், உணர்வுகள் குறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் சொல் என்ன என்பதை நினைத்ததுண்டா?

இவை அனைத்தும் Human என்ற சொல்லில் அடங்கும்.

'Human' என்ற சொல், Cambridge அகராதியின் 2026ஆம் ஆண்டுக்கான சொல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வளர்ச்சி அடைந்துவரும் செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடுமோ என்ற கவலை அதிகரித்துள்ளது. 

இதனால், மனிதராக இருப்பதன் அர்த்தம் குறித்து பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக Cambridge பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் ஃபிரான்செஸ்கா உட்வர்ட் (Francesca Woodward) சொன்னார்.

மனிதர்களையும் செயற்கை நுண்ணறிவையும் வேறுபடுத்துவது எது என்ற விவாதமும் உலகளவில் சூடுபிடித்துள்ளது.

மனிதர்களின் சிந்திக்கும் திறன், படைப்பாற்றல், அக்கறை ஆகியவை இந்த விவாதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

'Agent', 'Wholesome' 'Dusking' போன்ற சொற்களும் ஆண்டின் சிறந்த சொல்லுக்கான போட்டியில் இடம்பெற்றன.

மேலும், 'Aura Farming' , 'Looksmaxing' உள்ளிட்ட புதிய சொற்களும் இந்த ஆண்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு கவனிக்க வேண்டிய சொற்களாக 'FOBO', 'Weather Whiplash' போன்றவைக் குறிப்பிடப்பட்டுள்ளன. 

'FOBO' என்றால் "fear of becoming obsolete" என்று அர்த்தம். இது செயற்கை நுண்ணறிவால் வேலை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தைக் குறிக்கிறது.

'Weather Whiplash' என்ற சொல், ஒரு தீவிர வானிலை நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு விரைவாக மாறுவதைக் குறிக்கிறது.

கடந்த ஆண்டு 'Parasocial' என்ற சொல் சிறந்த சொல்லாகத் தேர்வு செய்யப்பட்டது.

 

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்