Skip to main content
இந்தியாவில் பணம் புரளும் இணைய விளையாட்டுகளுக்குத் தடை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் பணம் புரளும் இணைய விளையாட்டுகளுக்குத் தடை?

வாசிப்புநேரம் -
இணைய விளையாட்டுகளை நெறிப்படுத்த இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதனை முன்மொழிவார்.

இந்தியாவில் இணைய விளையாட்டுத் துறை வேகமாக வளர்கிறது. பெரும் பணம் புரள்கிறது.

இந்தச் சூழலில் கல்வி, விளையாட்டு சார்ந்த இணைய விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் நெறிப்படுத்தவும் சட்ட மசோதா வழிவகுக்கும்.

அதே சமயம் பணம் புரளும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்படும்.

இணைய விளையாட்டுத் துறையைக் கண்காணிக்கவும் ஒருகிணைந்த திட்டங்களுக்கு உதவி வழங்கவும் ஓர் ஆணையம் அமைக்கப்படும்.

பயனீட்டாளர்களைப் பாதுகாக்கப் புதிய நெறிமுறைகள் கொண்டுவரப்படும்.

தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிச் செய்யும்.

இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு, இணையவழிப் பண மோசடி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய சட்டத்தை இந்தியா யோசிக்கிறது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்