சிறைக்குள் சொகுசு வசதிகள்... சிறைத் தலைமை அதிகாரி பணிநீக்கம்
வாசிப்புநேரம் -
(படம்: AP/Tatan Syuflana)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவில் சிறைக் கைதிகளுக்குச் சொகுசு வசதிகள் வழங்கப்பட்ட சம்பவத்தில் சிறையின் தலைமை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஜாவாவில் உள்ள சிபினொங் (Cibinong) சிறையின் தலைமை அதிகாரி விஸ்னு ஹனி புத்ராந்தோ (Wisnu Hani Putranto) வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
அவர் உட்பட 17 அரசாங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்ற மாதம் 23ஆம் தேதி அந்தச் சிறையில் திடீரெனச் சோதனை நடத்தப்பட்டது.
சிறையில் இருக்கும் வழக்கமான அறைகளைத் தவிர்த்து சொகுசுக் குடியிருப்பு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் குளிர்சாதன வசதி, குளிர்பதனப் பெட்டிகள், பெரிய திரையைக் கொண்ட தொலைக்காட்சிகள், சோஃபா ஆகியவை இருந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
அத்துடன் உடற்பயிற்சிக் கூடமும் கோல்ஃப் விளையாட்டு பாவனைக் கூடமும் கட்டப்பட்டு வந்தன.
கைதிகள் அந்த வசதிகளைப் பயன்படுத்த வாரத்திற்கு 160,000 ரூப்பியா (சுமார் 11.50 வெள்ளி) செலுத்தியதாக நம்பப்படுகிறது.
பணக்காரக் கைதிகள் அந்தக் கட்டடங்களைத் தனிப்பட்ட குடியிருப்பு இடங்களாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அங்கு குடும்பத்தாரும் வருகையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
அத்தகைய 10 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
விசாரணை நடைபெறுகிறது.

ஆதாரம் : AGENCIES