ஜொகூரில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் தேடப்படுகிறார்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் கேளிக்கை விடுதி ஒன்றின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் ஆடவர் மாண்டார். மற்றொருவர் காயமுற்றதாக MalayMail ஊடகம் கூறுகிறது.
சம்பவம் நேற்றிரவு 11 மணிக்கு ஸ்கூடாய் (Skudai) நகரில் நடந்தது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயதுப் பெண் தேடப்படுகிறார்.
மாண்ட ஆடவருக்கு 27 வயது.
சம்பவத்தில் மூன்றாவதாக ஒரு நபரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவரைக் காவல்துறை கேட்டுக்கொண்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களைக் காவல்துறை தேடிவருகிறது.