Skip to main content
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் தொடர்ந்து சிறையில் இருப்பார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் தொடர்ந்து சிறையில் இருப்பார்

வாசிப்புநேரம் -
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் தொடர்ந்து சிறையில் இருப்பார்
(படம்: CNA/Fadza Ishak)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Sep 2026 01:18PM புதுப்பிப்பு : 11 Sep 2026 01:40PM
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் தொடந்து சிறையில் இருப்பார்.

வீட்டுக் காவலுக்கு மாறுவதற்கு அவர் முன்வைத்த விண்ணப்பம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டரசுப் பிரதேச மன்னிப்புக் குழுவின் சந்திப்பின்போது அந்த முடிவு எடுக்கப்பட்டது.

மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டர் (Sultan Ibrahim Sultan Iskandar) விண்ணப்பத்தை ஒத்திவைக்க அனுமதி அளித்ததாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இன்று நடைபெற்ற சந்திப்பில் 65 கைதிகளை விடுதலை செய்ய மன்னர் அனுமதி வழங்கினார்.

வெளிநாட்டினர் விடுதலை செய்யப்பட்ட 6 மாதத்திற்குள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

தற்போது நஜிப் காஜாங் சிறையில் உள்ளார்.

அவர் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி சிறைத்தண்டனையை நிறைவு செய்வார்.

நம்பிக்கை துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 2020ஆம் ஆண்டு அவருக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு அரச மன்னிப்பால் அது பாதியாகக் குறைக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்