மலேசியப் போக்குவரத்து அமைச்சர் பதவி விலகினார்
படம்: CNA/Fadza Ishak
This audio is generated by an AI tool.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் (Anthony Loke) உடனடியாகப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (Najib Razak) வீட்டுக் காவலில் தண்டனையைத் தொடர கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் அதனைத் தெரிவித்தார்.
திரு நஜிப் வீட்டுக் காவலைத் தொடங்கும்போது பதவி விலகப்போவதாகத் திரு லோக் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
சொன்னதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திரு நஜிப்புக்கு நிபந்தனைகளுடன் அரச மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்துத் திரு லோக் கடந்த செப்டம்பரில் பதவி விலகுவதாக முதலில் அறிவித்தார்.
ஆனால் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கேட்டுக்கொண்டதால் தற்காலிகமாகப் பதவியில் தொடர்ந்தார்.