Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உறவினர்களைப் பார்ப்பதற்காகப் பயணம் செய்ய விரும்பும் மலேசியர்கள்!

வாசிப்புநேரம் -
உறவினர்களைப் பார்ப்பதற்காகப் பயணம் செய்ய விரும்பும் மலேசியர்கள்!

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியர்கள் உறவினர்களைச் சந்திக்கச் செல்லும் பயணத்தைப் பெரிதும் விரும்புவதாக The Star செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பதற்காக மலேசியர்கள் சுமார் 44 விழுக்காடு உள்நாட்டுப் பயணம் செய்வதாக அது சொன்னது.

கடந்த ஆண்டைவிட அது 9 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டது.

21.6 விழுக்காட்டினர் பொருள்கள் வாங்குவதற்காக பயணம் செல்கின்றனர்.

13 விழுக்காட்டினர் மட்டுமே விடுமுறைக்காகப் பயணம் செல்கின்றனர்.

மலேசியர்கள் குடும்பத்தினர், நண்பர்களைச் சந்திக்கச் செல்வதை அதிகம் விரும்புவது மலிவுக் கட்டண ஹோட்டல்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக The Star செய்தித்தளம் சொன்னது.

பண்டிகைகள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றுக்குச் செல்லும் பெரும்பாலோர் உறவினர் வீடுகளில் அல்லாமல் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கவே விரும்புகின்றனர்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களைச் சமூக ஊடகங்கள் பிரபலப்படுத்தியுள்ளதாக மலேசிய ஹோட்டல்களின் சங்கத் தலைவர் சுட்டினார்.

சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அங்கு உறவினர்களைச் சந்தித்துவிட்டு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடுவதாக அவர் சொன்னார்.

 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்