KFCஐ மிஞ்சிய Jollibee - அதிபர் டிரம்ப்புக்கு விருந்து கொடுத்த பிலிப்பீன்ஸ் அதிபர்
(படம்: AP/Rolex Dela Pena/Pool)
This audio is generated by an AI tool.
பிலிப்பீன்ஸுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு (Donald Trump) விரைவு உணவு உபசரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior), திரு டிரம்ப்புக்கும் அவருடைய பேராளர் குழுவுக்கும் பிரபல விரைவு உணவகம் Jolibeeஇலிருந்து உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
அதைப் பற்றி இன்று அதிபர் மாளிகையில் நடந்த மதிய உணவு விருந்து நிகழ்ச்சியின்போது அதிபர் மார்கோஸ் பேசினார்.
மணிலாவில் அதிபர் டிரம்ப் ஆசியான் உச்சநிலை மாநாடு, குவாட் (Quad) உச்சநிலைச் சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொண்டார்.
Jolibee ஒரு பிலிப்பீன்ஸ் நிறுவனம்.
பிலிப்பீன்ஸ் சுவையை திரு டிரம்ப்புக்குக் கொடுக்க விரும்பியதால், Jolibeeஇலிருந்து உணவுக்கு ஏற்பாடு செய்ததாக அதிபர் மார்கோஸ் குறிப்பிட்டார்.
குறிப்பாக Jollibeeஇன் மிகப் பிரபலமான Chickenjoy பொறித்த கோழியை அமெரிக்கக் குழுவுக்கு அதிபர் மார்கோஸ் வழங்கினார்.
Jollibee பிலிப்பீன்ஸில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பிரபலமடைந்திருக்கிறது.
அமெரிக்காவில் மற்ற அமெரிக்க விரைவு உணவகங்களுக்கு Jollibee போட்டி கொடுப்பதாக அதிபர் மார்கோஸ் குறிப்பிட்டார்.
KFCஐவிட Jollibee பிரபலமாக இருப்பதை அவர் சுட்டினார்.