Skip to main content
"அம்மா என்றால் சும்மாவா?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

"அம்மா என்றால் சும்மாவா?" - நெகிழ வைத்த பறவை

வாசிப்புநேரம் -
"அம்மா என்றால் சும்மாவா?" - நெகிழ வைத்த பறவை

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

வெளியீடு : 14 Jun 2026 01:56PM புதுப்பிப்பு : 14 Jun 2026 02:41PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துருக்கியேவில் உழவு இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தார் ஒருவர்...

இயந்திரத்தின் டயரை விட சிறியதாக இருந்த பறவை பாதையை மறைத்தது.

அது அவ்வாறு செய்ததற்கான காரணம் இணையவாசிகளின் மனங்களை நெகிழ வைத்துள்ளது.

சமூக ஊடகத்தில் பரவும் காணாளியில் பழுப்பு நிறப் பறவை உழவு இயந்திரத்துக்கு முன் நிற்பதைக் காணமுடிகிறது.

பறவை அதன் இறக்கைகளை விரித்துக்கொண்டு எதையோ தடுப்பதைப் போல் தோன்றுகிறது.

அது மீண்டும் மீண்டும் கூவுவதையும் கேட்கமுடிகிறது.

உழவரின் கவனத்தை அது ஈர்த்தது.

உழவர் தரையை உற்றுப் பார்த்ததில் சிறிய கூட்டைக் கண்டார்.

அதில் முட்டைகள் இருந்தன.

தாய் பறவை அதன் முட்டைகளைக் காப்பதை உழவர் அறிந்தார்.

அவர் உடனடியாக இயந்திரத்தைத் திருப்பிவிட்டு இன்னொரு பாதையில் சென்றார்.

காணொளியைக் கண்ட பலர் பறவையையும் உழவரையும் பாராட்டினர்.

"அம்மா என்றால் சும்மாவா?"

"தாய் பறவைக்கு என் மரியாதை."

"ஒரு கனிவான செயல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது"

"உழவருக்கு நன்றி. பூமி நம்முடையது மட்டுமில்லை என்பதை மனிதர்கள் மறப்பதுண்டு"

போன்ற கருத்துகள் நிறைய விருப்பக்குறிகளைப் பெற்றன.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்