Skip to main content
இரவு நேரத்தில் பெண்களுக்காக ஓட்டப்பந்தயம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இரவு நேரத்தில் பெண்களுக்காக ஓட்டப்பந்தயம்!

வாசிப்புநேரம் -
இரவு நேரத்தில் பெண்களுக்காக ஓட்டப்பந்தயம்!

படங்கள்: Nike

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இரவு நேரத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாட முடியுமா?

பொதுவாகப் பெண்கள் பலருக்குச் சிரமமாகவே இருக்கிறது.

குறிப்பாக உடற்பயிற்சி செய்ய விரும்பும் பெண்கள் அதிகக் கவனத்துடன் இருக்கவேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.

இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் அனுபவத்தைப் பெற விரும்பிய பெண்களுக்காகவே Nike நிறுவனம் 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கு ஏற்பாடு செய்தது.

After Dark Tour எனும் அந்தப் பந்தயம் லண்டனின் மத்தியப்பகுதியில் நடந்தது.

அதற்காக லண்டன் சிட்டி (London City Airport) விமான நிலையம் மூடப்பட்டது. அதன் ஓடுபாதைகள் பந்தயத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன.

சுமார் 5,000 பெண்கள் பந்தயத்தில் கலந்துகொண்டனர்.

லாஸ் ஏஞ்சலிஸ், மும்பை, ஷங்ஹாய், சிட்னி, மெக்சிகோ சிட்டி, மணிலா ஆகிய மற்ற நகரங்களிலும் பந்தயத்தை நடத்த Nike திட்டமிடுகிறது. பெண்களின் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கப் பந்தயம் நடத்தப்படுகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்