Skip to main content
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - மோசமடையும் பதற்றம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகப் பாகிஸ்தான் கூறியிருக்கிறது. தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் மாண்டதாகவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. ஆப்கானிய எல்லையில் கிளர்ச்சி முகாம்களைக் குறிவைத்துத் தாக்கியதாகப் பாகிஸ்தான் கூறியது. அண்மையில் பாகிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு என்று
பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் (Attaullah Tarar) இந்த நடவடிக்கைகளை உளவுத்துறை சார்ந்தது என்று விவரித்தார். தெஹ்ரீக்-இ-தலிபான் (Tehreek-e-Taliban) பாகிஸ்தானுடனும் அதன் துணையமைப்புகளுடனும் தொடர்புடைய மறைவிடங்களைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறினார். அண்மைய தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் தலைவர்களின் உத்தரவில் நடத்தப்பட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக இஸ்லாமாபாத் கூறுகிறது. எல்லைதாண்டித் தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் நிலத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்குமாறு பாகிஸ்தான் பலமுறை தலிபான் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இப்போது பாகிஸ்தான் நடத்தியிருக்கும் தாக்குதலால் இருநாட்டுப் பதற்றம் மீண்டும் மோசமடைகிறது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்