தென்கொரியா: முடக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் மீட்பு
படம்: AFP/Pedro Pardo
தென்கொரிய அதிகாரிகள் தடுத்துவைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை மீட்டிருக்கின்றனர்.
அவற்றில் சுமார் 2,000 வாக்குச்சீட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தலைநகர் சோலில் (Seoul) இருக்கும் வாக்களிப்பு நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு நாள்களாக முடக்கி வைத்திருந்தனர்.
தேர்தல் அதிகாரிகள் மோசடி செய்வதாக அவர்கள் ஆர்ப்பரித்தனர்.
சுமார் 35 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நீடித்தது.
மக்களைக் கலைக்கும் பணியில் சுமார் ஆயிரம் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இவ்வாரம் நடந்த தேர்தலில் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச்சீட்டுக்குத் தட்டுப்பாடு இருந்தது.
அது மக்களைச் சினமூட்டியது.
மோசடி ஏதுமில்லை; நிர்வாகப் பிரச்சினைகளால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
என்ன நடந்தது என்று விசாரணை நடத்துமாறு தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae-myung) உத்தரவிட்டுள்ளார்.