உக்ரேன் அதிபருடன் சந்திப்பு நடத்தும் சாத்தியம் இல்லை: புட்டின்
கோப்புப்படம்: Dmitri Lovetsky/Pool via REUTERS
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் (Volodymyr Zelenskyy) விரைவில் சந்திப்பு நடத்தும் சாத்தியத்தை நிராகரித்திருக்கிறார்.
அமைதி உடன்பாட்டின் அம்சங்களுக்கு இணக்கம் எட்டப்படும்வரை சந்திப்பதில் அர்த்தம் இல்லை என்று திரு புட்டின் சொன்னார்.
போர் இலக்குகளை முழுமையாக அடையும்வரையில் ராணுவ நடவடிக்கையைத் தொடரப்போவதாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து திரு புட்டின் பலவீனமானவர் என்றும் அவர் மீண்டும் போரையே தேர்வுசெய்கிறார் என்றும் உக்ரேன் கூறியது.
முன்னதாக திரு புட்டினுடன் நேரடிச் சந்திப்பு நடத்திப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் திரு ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.