Skip to main content
கத்தாரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கத்தாரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

வாசிப்புநேரம் -
கத்தாரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 22 Mar 2026 10:49AM புதுப்பிப்பு : 22 Mar 2026 02:36PM

கத்தாரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக AFP ஊடகம் கூறுகிறது.

விபத்துக்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று அதன் அரசாங்கத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களைத் தேடி மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சில நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு சொன்னது.

விபத்து நடந்தபோது ஹெலிகாப்டர் எங்கு சென்றுகொண்டிருந்தது, அதில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து கத்தாரைக் குறி வைத்தும் தாக்குதல் நடந்து வருகின்றன. ஆனால் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கும் அந்தப் போருக்கும் தொடர்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்