ஒரே ஆட்டத்தில் 53 சிவப்பு அட்டை... சண்டை வெடித்தது
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
பிரேசிலில் ஒரு காற்பந்தாட்டம் கலவரமானது.
மினாஸ் ஜெரைஸ் (Minas Gerais) மாநிலத்தில் 20 வயதுக்குக்கீழ் உள்ள விளையாட்டாளர்களுக்கான ஆட்டம் நடைபெற்றது.
மாநிலங்களுக்கிடையிலான போட்டியின் அரையிறுதி ஆட்டம் அது.
உபர்லந்தியா (Uberlandia), மாமோர் (Mamore) ஆகிய இரு மாநிலங்களும் பொருதின.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே சண்டை வெடித்ததாக ஆட்ட நடுவர் ஃபெர்னாண்டோ பட்ரிக் ட்ரோஸ்கிக் மொடெஸ்டோ (Fernando Patrick Drosghic Modesto) தெரிவித்தார்.
உபர்லந்தியா ஆட்டக்காரர் ஒருவர் வெளியேற்றப்பட்ட பின்னர் அணியின் அதிகாரிகள் திடலில் இறங்கியதாக அவர் சொன்னார்.
ஆட்டம் 40 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
3-1 எனும் கோல் கணக்கில் மாமோர் முன்னிலையில் இருந்தது.
கோல் தந்த கொண்டாட்டத்தில் மாமோர் விளையாட்டாளர் ஒருவர் உபர்லந்தியா ஆட்டக்காரர்களைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
அது பெரிய சண்டையில் முடிந்தது.
43 விளையாட்டாளர்கள் உட்பட மொத்தம் 53 பேருக்கு சிவப்பு அட்டை.
ஒரே ஆட்டத்தில் இத்தனை சிவப்பு அட்டைகள் இடம்பெற்றது இதுவே முதல்முறை.
ஆட்டம் முடிந்தது.
காவல்துறையில் புகாரும் பதிவானது.