Skip to main content
இலங்கை ஆடவருக்கு மரண தண்டனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இலங்கை ஆடவருக்கு மரண தண்டனை - கருணை காட்டுமாறு சவுதி அரேபியாவுக்குக் கோரிக்கை

வாசிப்புநேரம் -
இலங்கை ஆடவருக்கு மரண தண்டனை -  கருணை காட்டுமாறு சவுதி அரேபியாவுக்குக் கோரிக்கை

(கோப்புப் படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Facebookல் பதிவிட்ட கருத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை ஆடவருக்குக் கருணை காட்டுமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BBC அது குறித்துத் தகவல் அளித்தது.

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் 24 வயது அனோஜன் சிவராசா (Anojan Sivarasa), இஸ்லாம், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகக் கருத்துத் தெரிவித்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அது இலங்கையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்குக் கருணை காட்டக் கோரி இலங்கை அரசாங்கமும் பல அரசியல் கட்சிகளும் அரசதந்திர முயற்சிகளை மேற்கொள்கின்றன.

28 செப்டம்பருக்குப் பிறகு அனோஜனின் நிலை குறித்து அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பதையும் சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவிக்கவில்லை.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்