ஷேக் ஹசீனாவுக்குப் புதிய கடப்பிதழ்?
படம்: AFP/Munir Uz Zaman
This audio is generated by an AI tool.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) புதிய கடப்பிதழுக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஈராண்டுக்கு முன் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அவர் பதவியிழந்தார்.
பங்களாதேஷை விட்டு வெளியேறிய திருவாட்டி ஹசீனா இந்தியாவில் அடைக்கலமானார்.
டிசம்பருக்குள் தாயகம் திரும்பப்போவதாக அவர் கூறியிருக்கிறார்.
திருவாட்டி ஹசீனாவுக்குப் புதிய கடப்பிதழும் தேசிய அடையாள அட்டையும் வழங்கும்படி புதுடில்லியில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்துக்குத் அவருடைய வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பினர்.
முந்தைய அரசாங்கம் அவரின் அடையாள ஆவணங்களை ரத்துசெய்ததாகக் கூறப்பட்டது.
பங்களாதேஷ் குடிமகளாகத் தமது உரிமைகளை மீண்டும் பெற அவர் விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டது.
திருவாட்டி ஹசீனாவை ஒப்படைக்கும்படி பங்களாதேஷ் அரசாங்கம் இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஒப்படைக்க வழியமைக்கும் இருதரப்பு ஒப்பந்தம் நடப்பில் இருப்பதை பங்களாதேஷ் சுட்டியது.
எனினும் திருவாட்டி ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்ற இந்தியா மறுத்துவிட்டது.
அவரின் புதிய கடப்பிதழ் விண்ணப்பம் குறித்து பங்களாதேஷ் அரசாங்கம் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.