Skip to main content
ஆறு கால் அதிசய மாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆறு கால் அதிசய மாடு

வாசிப்புநேரம் -
ஆறு கால் அதிசய மாடு

படம்: Facebook/ Rudy Bupati Aing

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியாவின் போயோலாலியைச் (Boyolali) சேர்ந்த ஆறு கால் மாடு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரா இனத்தைச் சேர்ந்த இந்த மாடு, போகோரில் (Bogor) நடந்த 2026 APPSI அதிபர் கிண்ண மாட்டுப் போட்டியில் “தனித்துவமான மாடு” பிரிவில் முதலிடம் பெற்றது.

மற்ற மாடுகள் எடை, உடல் அமைப்புக்காகப் போட்டியிட்டன. ஆனால் இதன் தனித்துவம் - 6 கால்கள்.

போயோலாலியில் இது முதல் சம்பவம் அல்ல.

2009இல், முசுக் (Musuk) பகுதியில் ஐந்து கால்களுடன் ஒரு கன்று பிறந்ததாக செய்தி வெளியானது. அதற்கு வேறு சில பிறவிக் குறைபாடுகளும் இருந்தன.

இரட்டைக் கருக்கள் உருவாகும் ஆரம்பக் கட்டத்தில் ஏற்பட்ட முழுமையற்ற வளர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம் என அப்போது ஒரு கால்நடை மருத்துவர் கூறினார்.

அப்படியானால், சில விலங்குகள் ஏன் கூடுதல் கால்களுடன் பிறக்கின்றன?

இந்த அரிய பிறவிக் குறைபாடு "Polymelia" எனப்படுகிறது.

கருவில் கால்கள் உருவாகும் ஆரம்பக் கட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் கூடுதல் கால்கள் உருவாகலாம்.

சில நேரங்களில், முழுமையாக வளராத இரட்டைக் கருவின் உடல் பாகங்கள் மற்றொரு கருவுடன் இணைந்திருப்பதும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் எல்லாச் சம்பவங்களுக்கும் இது மட்டும் காரணம் அல்ல.

கூடுதல் கால்களில் எலும்புகள், மூட்டுகள், தசைகள் இருக்கலாம். அவை உடலுடன் எப்படி இணைந்துள்ளன என்பது ஒவ்வொரு விலங்குக்கும் வேறுபடும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்