Skip to main content
பிரபலப் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரபலப் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

வாசிப்புநேரம் -
பிரபலப் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

(படம்: X / @Ayyappan_1504)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபலப் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (Solomon Pappaiah) காலமானார்.

அவருக்கு வயது 90.

மதுரையில் தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

உடல்நலக் குறைவால் அவர் சுமார் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திரு பாப்பையா மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.

தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.

இலக்கியம், சமூகம் சம்பந்தப்பட்ட பல கலந்துரையாடல்களில் முக்கியப் பங்காற்றியவர்.

அவர் இலக்கியத்துக்கும் கல்விக்கும் ஆற்றிய பங்கைக் கௌரவிக்கும் விதமாக 2021ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்